அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட சந்திப்பு   தென் கொரிய நகரான புசானில் நடைபெற்றது.

இந்த சந்திப்பு 100 நிமிடங்கள் நடைபெற்றது. தென் கொரியாவில் பூசான் நகரில் நடைபெற்ற இந்த சந்திப்பு திட்டமிடப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் நீடித்ததாக சீன ஊடகம் சிசிடிவி தெரிவிக்கிறது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையில் நடைபெறும் முதல் சந்திப்பு இதுவாகும். இந்த சந்திப்பில் வரி, டிக் டாக் விற்பனை உட்பட பல்வேறு விசயங்கள் ஆலோசிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

டிரம்ப் மற்றும் ஜின்பிங் கடைசியாக 2019-ம் ஆண்டு சந்தித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.