Sri Lanka Police Trincomalee Sri Lanka Police Investigation Accident Death
By Thulsi Oct 30, 2025 07:43 AM GMT
![]()
மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த கோர விபத்து சம்பவம் திருகோணமலை (Trincomalee) உட்துறைமுக வீதியில் இன்று (30) காலை இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
கார் - பட்டா - மோட்டார் சைக்கிள் ஆகிய மூன்று வாகனங்களே ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயங்களுடன் திருகோணமலை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்து, மேலதிக விசாரணைகளை திருகோணமலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!











