கடந்த 25 ஆண்டுகளில் பல்வேறு நிலைகளைச் சேர்ந்த இருபது அரசியல்வாதிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்தக் குழுவில் உள்ளூராட்சி நிறுவனங்களின் மூன்று தலைவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிகமாக இந்தக் காலகட்டத்தில் பல உள்ளூராட்சி உறுப்பினர்களும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர்.
கொலைகளுக்கு காரணம்
இதேவேளை, கொலைகளில் பலவற்றிற்கு பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான மோதல்களே காரணம் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர கொல்லப்பட்டதை தொடர்ந்து மேற்கண்ட தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.











