வெற்றிகரமாகச் சுற்றுவட்டப்பாதையை அடைந்த எச்.டி.வி., – எக்ஸ் 1 விண்கலம் – ஜப்பான்

1 week ago

சர்வதேச விண்வெளி மையத்துக்குத் தேவையான பொருட்களுடன், ஜப்பான் ஏவிய எச்.டி.வி., – எக்ஸ் 1 விண்கலம் வெற்றிகரமாகச் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது.

ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின், எச்.டி.வி., – எக்ஸ் 1 வகை விண்கலம் நவீன தொழில்நுட்பத்துடன் 2009ல் உருவாக்கப்பட்டது.

இதில் அதிக சரக்குகளை அனுப்ப முடியும். பறக்கும்போது மின்சாரத்தை வழங்கும் திறன் உடையது.

இந்த நிலையில் விண்ணில் ஏவப்பட்ட விண்கலம் வெற்றிகரமாகச் சுற்றுவட்டப்பாதையை அடைந்ததாகவும், சில நாட்களில் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடையும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.