“வீடு ஏன் சுத்தம் பண்ணல?” – கோபத்தில் கணவனின் கழுத்தை கத்தியால் குத்திய மனைவி! ₹8.4 லட்சம் பிணையில் வெளியே வந்த அதிர்ச்சி சம்பவம்..!!

1 week ago

அமெரிக்காவின் நொர்த் கரோலினா மாநிலம் சார்லட் நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சந்திரபிரபா சிங் என்ற பெண், வீடு சுத்தப்படுத்தாததை காரணமாக கூறி கணவரை கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

44 வயதான சந்திரபிரபா, ஒரு பள்ளியில் ஆசிரியர் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த அக்டோபர் 12 அன்று, வீட்டில் சுத்தம் செய்வது குறித்த சிறிய வாக்குவாதம், திடீரென கடுமையான தகராறாக மாறியது. கோபத்தின் உச்சியில் அவர் கத்தியை எடுத்துக்கொண்டு கணவர் அரவிந்த் சிங்கை கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது.

கடுமையாக காயமடைந்த அரவிந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.சம்பவம் நடந்த உடனே போலீசார் சந்திரபிரபாவை கைது செய்தனர் மற்றும் “ஆபத்தான ஆயுதத்தால் தாக்குதல், தீவிர காயம் விளைவித்தல்” என்ற குற்றச்சாட்டுகள் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டன.

நீதிமன்றத்தில் முதலில் பிணை மறுக்கப்பட்ட சந்திரபிரபாவிற்கு பின்னர் $10,000 டாலர் தொகையில் பிணை வழங்கப்பட்டது. வழக்கு முடியும் வரை கணவரை அணுகாதிருக்கவும், கண்காணிப்பு கருவி அணியவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் குடும்ப உறவுகளில் மனஅழுத்தம், சகிப்புத்தன்மையின்மை போன்றவை கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதை உணர்த்துவதோடு சிறிய வாக்குவாதங்களே பெரும் துயரங்களாக மாறுகின்றன. அதை தடுக்க, மனநலம், பரஸ்பர புரிதல் மற்றும் சாந்தமான அணுகுமுறைகள் அவசியம் என்பதை இந்தச் சம்பவம் வலியுறுத்துகிறது.

Ramkumar

சல்மான் கான் பயங்கரவாதியா….? வாய்தவறி ‘பலோசிஸ்தான்’-ஐ சொன்னதுக்கு இம்புட்டுப் பிரச்சனையா….? பாகிஸ்தான் அரசு செய்த சம்பவம்….!!

சல்மான் கான், ரியாத்தில் நடந்த ஜாய் ஃபோரம் 2025-ல் பேசும்போது, “பலோசிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மக்கள் இங்கு வேலை செய்கிறார்கள்” என்று கூறினார். இதில், பலோசிஸ்தானை பாகிஸ்தானிலிருந்து தனியாக குறிப்பிட்டது பாகிஸ்தான் அரசுக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலோசிஸ்தான் பாகிஸ்தானின் ஒரு…

Read more

சத்தியமா இது ஃபலூடா இல்லை…. அநியாயமா ஏமாந்து போன வெளிநாட்டு பயணி…. பாகிஸ்தானில் வைரலாகும் ‘மோசடி’ ஸ்வீட் வீடியோ….!!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஒரு வெளிநாட்டு பயணி ஃபலூடா எனும் இனிப்பை முயற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பயணி, உலகம் முழுவதும் பயணம் செய்து வருபவர், இந்தியாவில் சுற்றிய பின் தற்போது பாகிஸ்தானை ஆராய்ந்து வருகிறார்.…

Read more