இந்த ஆண்டு வாகன இறக்குமதியில் 63,000 கோடி ரூபாய் அரசாங்கம் வருமானம் ஈட்டியுள்ளது.
குறித்த விடயத்தை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் இறக்குமதி செய்யப்பட்ட 250,000 வாகனங்களின் மூலம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதிக் கட்டுப்பாடு
இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் தனிநபர் மற்றும் வர்த்தக வாகனங்கள் உட்பட ஒட்டுமொத்த இறக்குமதிக்காக சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 36,431 கோடி இலங்கை ரூபா) செலவிடப்பட்டுள்ளது.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறியதாக தெரிவிக்கப்பட்டு, கடந்த மே மாதம் முதல் துறைமுகங்களில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில், ஆவணங்கள் மற்றும் பதிவு தொடர்பான குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவற்றை விடுவிக்க நடைமுறைக்கு வரும் வகையில் அண்மையில் வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.











