வவுனியாவில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து கள்ளிக்குளம் சந்தி, ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழில் இருந்து வவுனியா நோக்கி வந்த பட்டா ரக வாகனம் முன்னே திடீரென வீதியை ஊடறுத்து பாய்ந்துள்ளது.
டிப்பர் வாகனங்கள்
இதனை அவதானித்த சாரதி விபத்தை தடுப்பதற்காக வேக கட்டுப்பாட்டை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, குறித்த வாகனத்தின் பின் வந்த ஜீப் ரக வாகனம் மற்றும் டிப்பர் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலதிக விசாரணை
குறித்த விபத்து சம்பவத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா ஓமந்தை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.











