மொட்டுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் இவர் தான்...! அடித்துக் கூறும் மொட்டுத்தரப்பு

6 days ago

வரும் 2029 ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் பட்சத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் நாமல் ராஜபக்சவே வேட்பாளராக களமிறங்குவார் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன (Lakshman Yapa Abeywardena) தெரிவித்துள்ளார்.

தற்போதைய சுழ்நிலையில் எமது கட்சியில் அவரே சிறந்த வேட்பாளராக உள்ளார் என லக்ஷ்மன் யாப்பா அபேவர் தன குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

சிறந்த வேட்பாளர்

அவர் மேலும் கூறுகையில், “ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது.

மொட்டுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் இவர் தான்...! அடித்துக் கூறும் மொட்டுத்தரப்பு | 2029 Slpp Presidential Candidates Namal

சவாலை ஏற்கக்கூடிய தலைவருக்கே நாட்டு மக்கள் ஆதரவளிப்பார்கள்.  கட்சிகளும் இத்தகைய நபரையே ஆதரிக்கும்.

கடந்த முறை நெருக்கடியான சூழ்நிலையில் நாமல் ராஜபக்ச போட்டியிட்டார். 

எமது கட்சியில் தற்போது உள்ள சிறந்த வேட்பாளர் தான் நாமல் ராஜபக்ச அவர் தான் ஜனாதிபதி வேட்பாளர். தன்னை அவர் பலப்படுத்திக் கொண்டு வருகின்றார் என்றார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!