மீண்டும் ஆப்கான் எல்லையில் வெடித்த போர்! – 5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு, பதிலடியாக 25 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!!

1 week ago

ஆப்கானிஸ்தானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் போரைத் தொடங்குவோம் என பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது இரு நாட்டு எல்லைப் பகுதியில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

இந்தப் பயங்கர மோதலில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். அதேசமயம், பதிலடித் தாக்குதலில் 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் பகுதியில் இருந்து பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்குள் ஊடுருவ முயன்றதாலேயே இந்தக் கடுமையான மோதல் ஏற்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் பாகிஸ்தானின் குர்ரம் மற்றும் வடக்கு வஜீரிஸ்தான் மாவட்டங்களுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்தபோது இந்தச் சண்டை நிகழ்ந்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

Ramkumar

“20 வயசு”… இந்திய வம்சாவளி பெண்கள் தான் டார்கெட்… இன வெறியால் இங்கிலாந்தில் நடக்கும் கொடூரம்… ஈரக்குலையை நடுங்க வைக்கும் சம்பவம்..!!!

இங்கிலாந்தின் வடக்குப் பகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவரை குறிவைத்து நடந்த ‘இன அடிப்படையிலான பாலியல் வன்கொடுமை’ சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், ஒரு மாதத்திற்கு முன்பு பிரிட்டிஷ் சிக்கள் பெண் ஒருவருக்கு எதிராக நடந்த…

Read more

“வீடு ஏன் சுத்தம் பண்ணல?” – கோபத்தில் கணவனின் கழுத்தை கத்தியால் குத்திய மனைவி! ₹8.4 லட்சம் பிணையில் வெளியே வந்த அதிர்ச்சி சம்பவம்..!!

அமெரிக்காவின் நொர்த் கரோலினா மாநிலம் சார்லட் நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சந்திரபிரபா சிங் என்ற பெண், வீடு சுத்தப்படுத்தாததை காரணமாக கூறி கணவரை கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 44 வயதான சந்திரபிரபா, ஒரு பள்ளியில் ஆசிரியர் உதவியாளராக…

Read more