மகிந்தவின் பாதுகாப்பு அதிகாரிக்கு பிணை: நீதிமன்றம் உத்தரவு!

6 days ago

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி, 28 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமாகச் சேர்த்ததாக சந்தேகத்தின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

அதன்படி, குறித்த வழக்கு இன்று (31.10.2025) கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வெளிநாட்டு பயணத் தடை

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

 நீதிமன்றம் உத்தரவு! | Neville Wanniarachchi Granted Bail

அதன்படி, சந்தேக நபரை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் தலா 1 மில்லியன் மதிப்புள்ள மூன்று சரீரப் பிணையிலும் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதுடன் வழக்கை எதிர்வரும் ஜனவரி 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.