பெருந்தோட்ட மக்கள் குறித்து வெளியான சர்ச்சைக்குரிய கருத்து: வெடித்த போராட்டம்

6 days ago

 ஹட்டனில் பெருந்தோட்ட மக்களினால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தை தமிழ் சிவில் சமூக அமைப்பு நேற்று (30) முன்னெடுத்துள்ளது.

பெருந்தோட்ட மக்களை அவமானப்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றுக்கு எதிராக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தடகளப் போட்டி

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இருந்து திரும்பிய இலங்கை வீரர்களை வரவேற்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 வெடித்த போராட்டம் | Hatton Protest Over Peradeniya Slur

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட பெருந்தோட்ட பகுதியை சேர்ந்த ஒரு சிவில் சமூக ஆர்வலர், பெருந்தோட்டத்துறை ஒரு பட்டினியால் வாடும் நாடு போன்றது என தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அந்த சமூகத்திலிருந்தே ஆசிய தடகளப் போட்டிகளில் வீரர்கள் பங்கேற்றுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடும் எதிர்ப்பு 

இந்தநிலையில், அந்தக் கருத்தை அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டதையடுத்து பெருந்தோட்ட மக்களிடையே கடும் எதிர்ப்பும் அதிருப்தியும் எழுந்துள்ளது.

 வெடித்த போராட்டம் | Hatton Protest Over Peradeniya Slur

இதையடுத்து ஹட்டனில் இதற்கு எதிராக ஆர்ப்பார்ப்பட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் இதில் கலந்து கொண்டவர்கள், தோட்டத்துறை மக்கள் தற்போதைய நிலையில் பொருளாதார ரீதியாக வலுவடைந்து வரும் சமூகக் குழுவாக உள்ளனர் எனவும் மற்றும் அவர்களை இழிவுபடுத்தும் வகையில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இத்தகைய பொறுப்பற்ற கருத்துக்கள் சமூக ஒற்றுமையையும் மற்றும் தோட்டத் துறை மக்களின் மரியாதையையும் பாதிக்கும் வகையில் உள்ளன என்பதையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!