பாரியளவான போதைப்பொருளுடன் பத்மேவின் நெருங்கிய சகாக்கள் கைது!

6 days ago

வத்தளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பல்லியவத்தை பிரதேசத்தில் மூன்றரை கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் தற்போது தடுப்புக் காவலில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும், போதைப்பொருள் கடத்தல்காரருமான கெஹெல்பத்தர பத்மேவின் மூன்று சகாக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டமான 'முழு நாடும் ஒன்றாக' தேசிய செயற்பாட்டின் கீழ் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்று (30.10.2025) மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர்கள்

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25, 21 மற்றும் 28 வயதான வத்தளை பல்லியவத்தை, அவரக்கொட்டுவ மற்றும் கலகஹதுவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

பாரியளவான போதைப்பொருளுடன் பத்மேவின் நெருங்கிய சகாக்கள் கைது! | Padme Colleagues Arrested

இந்தச் சுற்றிவளைப்பின் போது, சந்தேகநபர்களிடம் இருந்து 2 கிலோ 165 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் இன்று (31.10.2025) வெலிசர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு தடுப்புக் காவல் உத்தரவு பெறப்படவுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.