பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் உருவாக்கப்பட்ட பின்னர், அவற்றை இயக்கும் அதிகாரமும் கட்டுப்பாடும் அமெரிக்காவிடம் இருந்ததாக முன்னாள் சிஐஏ (CIA) அதிகாரி ஜான் கிரியாகோ அதிர்ச்சிகரமாக வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்க ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்ததாவது, “பாகிஸ்தான் அணு ஆயுதங்களை உருவாக்கியதும், அதைப் பயன்படுத்தும் அதிகாரத்தை நாங்கள் (அமெரிக்கா) எடுத்துக்கொண்டோம். இதற்காக அப்போது பாக். அதிபராக இருந்த பர்வேஸ் முஷாரஃப் தலைமையிலான அரசுக்கு கோடிக்கணக்கான டாலர்கள் வழங்கப்பட்டன” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது, “அந்த காலகட்டத்தில் உலகம் முழுவதும் அணு ஆயுதங்கள் வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. அணு ஆயுதம் இல்லாத நாடுகள் சர்வதேச அரங்கில் பெருமளவு புறக்கணிக்கப்பட்டன. இந்தியா 1998 மே 11ஆம் தேதி பொக்ரான் பகுதியில் வெற்றிகரமாக அணு ஆயுத சோதனை செய்தது; அதற்கு 17 நாட்களில் பாகிஸ்தானும் அதேபோல் சோதனை நடத்தி உலகை அதிர்ச்சியடையச் செய்தது,” என்று நினைவூட்டினார்.
ஜான் கிரியாகோ கூறியதாவது, அந்த சூழ்நிலையில் அமெரிக்கா பாகிஸ்தானின் அணு திட்டத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, “பயங்கரவாதிகளின் கையில் அணு ஆயுதங்கள் போகக் கூடாது” என்ற காரணத்தை முன்வைத்து அதனை நியாயப்படுத்தியதாகும். அந்த ஒப்பந்தத்தின் பெயரில் பாகிஸ்தான் அரசுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டோம். ஆனால் அதே நேரத்தில் இந்தியா மீது பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன — 2001ல் நாடாளுமன்ற தாக்குதலும், 2008ல் மும்பை தாக்குதலும் இதன் விளைவுகள். அப்போதைய சூழ்நிலையில் இந்தியா எப்போது வேண்டுமானாலும் பதிலடி கொடுக்கும் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் இந்தியா அமைதி காத்தது; அது மிகுந்த முதிர்ச்சியான நடவடிக்கை,” என்றார்.
“தாக்குதல் தொடங்குவது எளிது; ஆனால் அதை நிறுத்துவதே கடினம். இந்தியா அதனை புரிந்துகொண்டது,” என்று கூறியுள்ளார். மேலும் இந்த வாக்குமூலம், பாகிஸ்தானின் அணு ஆயுதத் திட்டத்தின் நம்பகத்தன்மை மீதான கேள்விகளையும், அமெரிக்காவின் மறைமுக அரசியல் பங்கைப் பற்றிய விவாதங்களையும் மீண்டும் எழுப்பியுள்ளது.
Siva Kumari
மீண்டும் ஆப்கான் எல்லையில் வெடித்த போர்! – 5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு, பதிலடியாக 25 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!!
ஆப்கானிஸ்தானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் போரைத் தொடங்குவோம் என பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது இரு நாட்டு எல்லைப் பகுதியில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இந்தப் பயங்கர மோதலில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 5 பேர்…
“20 வயசு”… இந்திய வம்சாவளி பெண்கள் தான் டார்கெட்… இன வெறியால் இங்கிலாந்தில் நடக்கும் கொடூரம்… ஈரக்குலையை நடுங்க வைக்கும் சம்பவம்..!!!
இங்கிலாந்தின் வடக்குப் பகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவரை குறிவைத்து நடந்த ‘இன அடிப்படையிலான பாலியல் வன்கொடுமை’ சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், ஒரு மாதத்திற்கு முன்பு பிரிட்டிஷ் சிக்கள் பெண் ஒருவருக்கு எதிராக நடந்த…











