நுகேகொடை பேரணியில் முன்னாள் ஜனாதிபதிகள் கலந்துக்கொள்ளவில்லை

1 day ago

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள கூட்டு எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதிகள் எவரும் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

எனினும், முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, கோட்டாபய ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இந்தப் பேரணிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

பொதுஜன பெரமுன

முன்னாள் ஜனாதிபதிகள் குறித்த கூட்டத்தில் பங்கேற்காமல் இருப்பதே சிறந்தது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் கருதுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நுகேகொடை பேரணியில் முன்னாள் ஜனாதிபதிகள் கலந்துக்கொள்ளவில்லை | Former Presidents Did Not Participate Rally

இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்வது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸின் இல்லத்தில் பல கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன.

தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்வரும் 21 ஆம் திகதி பேரணியொன்றை நடத்தவுள்ளனர்.

இதில் கலந்துக்கொள்ளுமாறும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.