தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகளை அதிகரித்துள்ளது.

2025ஆம் நிதி ஆண்டுக்காக பாதுகாப்பு – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்காக 61,744 கோடியே 50 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 2026ஆம் ஆண்டுக்காக பாதுகாப்பு – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்காக 64800 கோடி ரூபா ஒதுக்கப்பட் டுள்ளது. இதன்மூலம் 2026 ஆம் ஆண்டுக்காக பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்காக 3055 கோடியே 50 இலட்சம் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கங்களை போன்று தற்போதைய அரசாங்கமும் பாதுகாப்பு அமைச்சுக்கான ஒதுக்கீடுகளை அதிகரித்துள்ளமை தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.