“ஜெயிலில் கைதியுடன் உல்லாசம்”… பெண் அதிகாரிகள் செய்ற வேலையா இது…? அடுத்தடுத்து சிக்கும் புள்ளிகள்… பகீர் தகவல்..!!

1 week ago

இங்கிலாந்தின் ஸ்டாபோர்ட்ஷைர் மாநிலத்தில் உள்ள உட்டாக்டர் சிறையில் பெண் அதிகாரிகள் சிலர் கைதிகளுடன் சட்டவிரோத உறவு பேணியதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறையில் ஆயுள் தண்டனை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் தண்டனை பெற்ற கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சிறையில் பணியாற்றிய பெண் அதிகாரி சாரா பார்னெட் (31), 2023 ஆகஸ்ட் 11 முதல் 24 வரை சிறைக்கைதி ஒருவருடன் உல்லாசத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விவகாரம் வெளிப்பட்டதைத் தொடர்ந்து, பார்னெட் சிறைத்துறைப் பணியில் இருந்து விலகினார். தற்போது அவர் ஸ்டாபோர்ட்ஷைர் மாநிலம் ரூக்லே பகுதியில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார்.

அதே சிறையில் பணியாற்றிய மற்றொரு பெண் அதிகாரி ஹீதர் பின்ச்பெக் (28) என்பவரும் கைதியுடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. பின்ச்பெக், 2017 ஆம் ஆண்டு தாக்குதல் குற்றத்தில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ஜோசப் ஹார்டி (31) என்ற கைதியுடன் 2023 பிப்ரவரி 15 முதல் மார்ச் 4 வரை சட்டவிரோதமாக தொலைபேசி வழியே பேசினார் என விசாரணையில் தெரியவந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக பின்ச்பெக் சமீபத்தில் பிர்மிங்ஹாம் கிரவுன் கோர்ட்டில் ஆஜரானார். அதில், அரசு அலுவலக பணியாளராக இருந்தபோது தவறான நடத்தை மேற்கொண்டதை அவர் ஒப்புக்கொண்டார். அவருக்கான தண்டனை தீர்ப்பு வரும் ஜனவரி 9 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. அதுவரை அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சாரா பார்னெட் வழக்கில் அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 6 ஆம் தேதி கிரவுன் கோர்ட்டில் நடைபெற உள்ளது.

இதற்கு முன், அதே சிறையின் முன்னாள் காசாளரான யோலண்டா பிரிக்ஸ் (52) என்பவர் கைதியுடன் சட்டவிரோத உறவில் ஈடுபட்டதாக குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, லிங்கன் கிரவுன் கோர்ட்டில் அவருக்கு 8 மாத கால சிறை தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் சிறை அதிகாரிகள் தொடர்ச்சியாக கைதிகளுடன் தொடர்பு கொண்ட சம்பவங்கள் வெளிவருவது, இங்கிலாந்து சிறைத்துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Siva Kumari

வெறும் 20 நாள்ல…. தலை நிறைய முடி! – தைவானில் கண்டுபிடிக்கப்பட்ட அற்புத சீரம்…. அறிவியல் உலகில் நிகழ்ந்த அதிசயம்…!!

முடி உதிர்வால் அவதிப்படும் பலருக்கும் புதிய நம்பிக்கையை அளிக்கும் கண்டுபிடிப்பு ஒன்றை தைவான் தேசிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் உருவாக்கிய புதிய “சீரம்” (பூசும் மருந்து திரவம்) 20 நாட்களுக்குள் முடி மீண்டும் வளர்ச்சியடையச் செய்யும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது.…

Read more

“பாக். அதிபருடன் போடப்பட்ட ஒப்பந்தம்”… பாகிஸ்தான் அணு ஆயுதங்களை கட்டுப்படுத்திய அமெரிக்கா…. பல வருஷ சீக்ரட்டை போட்டுடைத்த அதிகாரி..!!!

பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் உருவாக்கப்பட்ட பின்னர், அவற்றை இயக்கும் அதிகாரமும் கட்டுப்பாடும் அமெரிக்காவிடம் இருந்ததாக முன்னாள் சிஐஏ (CIA) அதிகாரி ஜான் கிரியாகோ அதிர்ச்சிகரமாக வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்க ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்ததாவது, “பாகிஸ்தான் அணு ஆயுதங்களை உருவாக்கியதும், அதைப்…

Read more