செவ்வந்தி தங்கிய யாழ்பாண வீட்டில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள்!

1 week ago

இஷாரா செவ்வந்திக்கு இந்தியா தப்பிச் செல்வதற்காக படகுகளை ஒழுங்குபடுத்தி கொடுத்த நபரின் வீட்டிலிருந்து விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானதாக கூறப்படும் இரண்டு பிஸ்டல் ரக துப்பாக்கிகள் மற்றும் உயிருள்ள தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபரின் யாழ்ப்பாண வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்போது, சந்தேக நபரிடமிருந்து இரண்டு வெளிநாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கிகள், இரண்டு மகசின்கள் மற்றும் ஏழு 9MM நேரடி தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.


முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் 

இதேவேளை, சம்பந்தப்பட்ட ஆயுதங்களை வழங்கிய 43 வயதுடைய முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் வவுனியாவின் புளியங்குளம் பகுதியில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

செவ்வந்தி தங்கிய யாழ்பாண வீட்டில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள்! | Sewwandi Investigation Ltte Weapons Found Jaffna

இந்த நிலையில், இஷாரா செவ்வந்தி நாடுகடத்திய சம்பவம் தொடர்பாக இதுவரை பத்து பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!