பாகிஸ்தானும் மற்றும் சீனாவும் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவது போல நாங்களும் அதை நடத்த போகின்றோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டர்ம்ப் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பாகிஸ்தான், சீனா, ரஷ்யா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் அணு ஆயுத சோதனையை நடத்துகின்றன.
உலகளாவிய கண்காணிப்புகள்
இருப்பினும், அவர்கள் இதை பேச மாட்டார்கள் இருப்பினும் நாங்கள் வேறுபட்டவர்கள் என்பதால் இதை பேசுகின்றோம்.
மக்களுக்கு என்ன நிகழ்கின்றது என்பது தெரியாதவாறு, அவர்கள் பூமிக்கடியில் அணு ஆயுத சோதனையை மேற்கொள்கின்றனர்.

நீங்கள் சிறிதளவு மட்டுமே அதிர்வுகளை உணர்கிறீர்கள், உலகளாவிய கண்காணிப்புகள் இருந்தாலும் இத்தகைய அணு ஆயுத சோதனைகளை மறைமுகமாக நடத்த முடியும்.
நாங்களும் இந்த சோதனையை நடத்த இருக்கின்றோம். ஏன் என்றால் அவர்கள் நடத்துகின்றனர், அவர்கள் சோதனை செய்வதாலும் மற்றவர்கள் சோதனை செய்வதாலும் நாங்களும் சோதனை செய்ய இருக்கின்றோம்.
பாகிஸ்தானும் சோதனை
நிச்சயமாக சொல்கிறேன், வடகொரியாவும் சோதனை செய்து வருகின்றது மற்றும் பாகிஸ்தானும் சோதனை செய்து வருகின்றது.
இந்த நாடுகள் எங்கு சோதனை நடத்துகின்றன என்பது அமெரிக்காவுக்கு தெரியாது ஆனால் சோதனையை அவர்கள் நடத்துகின்றார்கள்.

சோதனை செய்யாத ஒரேநாடு அமெரிக்கா தான் ஆகவே சோதனை செய்யாத ஒரே நாடாக நாங்கள் இருக்க விரும்பவில்லை.
மற்ற நாடுகளின் சோதனை காரணமாக நாங்களும் சோதனை நடத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறைக்கு நான் அறிவுறுத்தி உள்ளேன், அந்த செயல்முறை உடனடியாக தொடங்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.











