கொழும்பில் அழகுகலை பயின்று வந்த கிளிநொச்சி மாணவியின் விபரீத முடிவு

1 day ago

பெல்வுட் அழகு கலை நிலையத்தில் படிக்கும் 23 வயது மாணவி விடுதியில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கலஹா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த மாணவி கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் என தெரியவருகிறது.

காதல் விவகாரம் 

பெல்வுட் அழகு கலை நிலையத்தில் படித்து வந்த அவர், கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று 30 ஆம் திகதி திரும்பி வந்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொழும்பில் அழகுகலை பயின்று வந்த கிளிநொச்சி மாணவியின் விபரீத முடிவு | Kilinochchi Student Hangs To Death In Hostel

தற்கொலைக்கு காரணம் காதல் விவகாரம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இறந்த மாணவியும் மற்ற மாணவர்களும் விடுதி அறையில் இருந்ததாகவும், சம்பவம் நடந்த நேரத்தில் மாணவி தனிப்பட்ட விஷயத்திற்காக வெளியே சென்றிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். சம்பவம் குறித்து கலஹா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!