கென்யா விமான விபத்தில் சிக்கி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 12 பேர் பலி!

6 days ago

கென்யாவில் விமான விபத்தில் சிக்கி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 12 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கென்யாவின் கடற்கரைப் பகுதியான குவாலே மாவட்டத்தில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது.

மசாய் மாரா தேசிய வனவிலங்கு காப்பகத்திற்குச் செல்லப் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையில் விழுந்து விமானம் தீப்பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் விமானத்தில் பயணித்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 12 பேரும் உயிரிழந்தனர். அவர்களது உடல் பாகங்கள் மீட்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.