கனடாவில் இந்தியர் ஒருவர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடாவிலுள்ள மெக்டொனால்டு உணவகத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்த காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இனவெறி கருத்து
குறித்த காணொளியில், இனவெறி கருத்துக்களை தெரிவித்து கொண்டே இந்தியர் ஒருவர் மீது ஒரு நபர் தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

சமீபத்தில், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்திய வம்சாவளி
அதேபோல், எட்மண் நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார்.

இந்தநிலையில், தற்போது ஒரு இந்தியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.











