வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்ட தற்காலிக விசாக்களை ரத்து செய்ய கனடா அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடாவின் உள்கட்டமைப்பு வசதியானது உள்நாட்டினருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகின்றது.
இந்தநிலையில், கனடா அரசும் இதுதொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
விண்ணப்பங்கள்
இதனடிப்படையில், இதில் 2025 ஒகஸ்ட் மாதத்தில் கனடாவில் படிப்புக்காக விண்ணப்பித்த இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் சுமார் 74 வீதம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு, கடந்த ஆண்டும் அதிக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிராகரிப்பு
இந்தநிலையில், 2023 இல் நிராகரிப்பு விகிதம் 32 வீதம் என்பதுடன் 2023 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு மிகவும் குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், படிப்புக்காக என தெரிவித்து கனடாவுக்குச் செல்ல விண்ணப்பிக்கும் மோசடியும் அங்கு அதிகரித்து வருவதால் அதனைத் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











