ஒக்டோபரில் இலங்கை சுற்றுலாத்துறை 21.5% வளர்ச்சி!

15 hours ago

2025 ஒக்டோபரில் இலங்கை 165,193 சுற்றுலாப் பயணிகளை வரவேற்றது.

இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 21.5% அதிகரிப்பைக் குறிக்கிறது.

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.89 மில்லியனை எட்டியுள்ளது. 

ஜனவரி மாதத்தில் அதிகபட்சமாக 252,000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

வளர்ந்து வரும் விமான இணைப்பு மற்றும் சர்வதேச அரங்கில் இலங்கையின் சுற்றுலாத் துறைக்கான அங்கீகாரம் என்பவற்றால் இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்த வருகை இரண்டு மில்லியனைத் தாண்டும் என்று சுற்றுலா அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

blank