ஐஎஸ்ஐஎஸ் கோராசன் பயங்கரவாத அமைப்பைப் பாகிஸ்தான் தூண்டிவிடுவதாக ஆப்கானிஸ்தான் குற்றச்சாட்டு!

1 week ago

ஆப்கானிஸ்தானின் நேரடி தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல், ஐஎஸ்ஐஎஸ் கோராசன்  பயங்கரவாத அமைப்பைப் பாகிஸ்தான் தூண்டிவிடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் கோராசன் பயங்கரவாத அமைப்பின் தலைமை செய்தி தொடர்பாளர் சுல்தான் ஆஷிஸ் அசாம், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அதிகாரிகள் உடன் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பலுசிஸ்தான் மற்றும் கைபர் பதுன்குவா மாகாணங்களை மையமாகக் கொண்டு செயல்படும் ஐஎஸ்ஐஎஸ் கோராசன் பயங்கரவாத அமைப்பின் முக்கிய நபராக ஆஷஸ் அசாம் இருப்பதால், அவரைப் பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்து ஐஎஸ்ஐ உளவு அமைப்பு காப்பாற்றி வருவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில், ஐஎஸ்ஐஎஸ் கோராசன் பயங்கரவாத அமைப்பைத் தூண்டி விடுவதை பாகிஸ்தான் உளவுத்துறை வேலையாக வைத்துள்ளது.

அக்டோபர் 9-ம் தேதி காபூலில் பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பும் அடிக்கடி சந்தித்துவருவதால், ஆப்கானிஸ்தான் அரசு தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது.