இலவச மின்சாரம் வழங்கும் சோலார் ஷேரர் திட்டத்தை அவுஸ்திரேலியா அரசு அறிமுகப்படுத்தயுள்ளது.
இந்தநிலையில், வீடுகளுக்கு தினமும் மூன்று மணி நேரம் இலவச மின்சார வழங்கும் சோலார் ஷேரர் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதனடிப்படையில், ஜூலை 2026 இற்குள் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
விற்பனையாளர்கள்
இதன் மூலம் மின்சார சில்லறை விற்பனையாளர்கள் நியூ சவுத் வேல்ஸ், தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள வீடுகளுக்கு தினமும் குறைந்தது மூன்று மணிநேரம் இலவச மின்சாரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் உட்பட அனைத்து வீடுகளுக்கும் பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயனாளர்கள்
பயனாளர்கள், ஒரு ஸ்மார்ட் மீட்டரை வைத்திருக்க வேண்டும் மற்றும் சூரிய மின் உற்பத்தி நேரங்களுக்கு ஆற்றல் பயன்பாட்டை மாற்ற சோலார் ஷேரர் திட்டத்தைத் தேர்வுசெய்ய வேண்டும் என அறிவுருத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் பகல் நேரத்தில் பயனர்கள் இலவச சூரிய மின்சாரத்தைப் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











