தமிழீழ மாவீரர் துயிலுமில்லங்களில் நிலை கொண்டுள்ள இலங்கை படைகள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள்.மாவீரர்களது குடும்பங்கள் எந்தவித கெடுபிடிகளுமின்றி இம்முறை நினைவேந்தல்களை முன்னெடுக்கமுடியுமென தேசிய மக்கள் சக்தி அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அமைச்சர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றிருந்தது.
இந்நிலையில் கூட்டத்தில் பங்கெடுத்திருந்த தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தேராவில் துயிலுமில்லத்தில் சுமார் 15வரையிலான படையினரே நிலைகொண்டுள்ளனர்.தற்போதைய ஆட்சியாளர்களாவது படையினரை அங்கிருந்து வெளியேற்றி துயிலுமில்லத்தை விடுவிக்க கோரியிருந்தார்.
அதற்கு பதிலளித்த தேசிய மக்கள் சக்தி அமைச்சர் சந்திரசேகர் மாவீரர்களது குடும்பங்கள் எந்தவித கெடுபிடிகளுமின்றி இம்முறை நினைவேந்தல்களை முன்னெடுக்கமுடியுமென தெரிவித்ததுடன் படைகளை துயிலுமில்லங்களிலிருந்து வெளியேற கோரும் பணிப்பு ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஜனாதிபதியின் உத்தரவு படைகளை சென்றடையவில்லையெனவும் விரைவில் தமிழீழ மாவீரர் துயிலுமில்லங்களில் நிலை கொண்டுள்ள இலங்கை படைகள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தின் கோப்பாய் துயிலுமில்லங்களிலுள்ள படையினரையும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்திருந்தார்.












