இங்கிலாந்தில் ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட பூசணிக்காயை வளர்த்து விவசாயிகள் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர்.
விவசாயிகளுக்கு ஈடாகப் படித்த இளைஞர்களும் இன்றைக்கு விவசாயத்தில் ஏதாவது ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டுவதோடு, விவசாயத்தில் தங்களுடைய அதிக முயற்சி மற்றும் கடின உழைப்பின் மூலம் விளையும் பழங்கள், காய்கறிகள் அல்லது தானியங்களை விளைவதைப் பார்த்துப் பெருமை கொள்கிறார்கள்.
இவர்களில் சிலர் தங்கள் சாகுபடி திறன்களை நிரூபிக்கப் பல்வேறு போட்டிகளில் பங்கேற்கிறார்கள்.
இப்படி தான் இங்கிலாந்தின் டோட்டனில் இயன் மற்றும் ஸ்டூவர்ட் பாட்டன் இருவர் இணைந்து அதிக எடையுள்ள பூசணிக்காயை வளர்த்துச் சாதனைப் படைத்துள்ளனர்.
அதுவும் எத்தனை கிலோ தெரியுமா?. ஆயிரத்து 278 கிலோ எடை 649 சென்டி மீட்டர் சுற்றளவும், கொண்டது. இதனால் இருவருக்கும் கின்னஸ் உலக சாதனை விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளது.











