கம்போடியாவின் ப்னாம் பென் நகரில் அக்டோபர் 23 அன்று ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. ஒரு சிறுவனுக்கு காது வலி மற்றும் தொடர்ந்து ஒலி கேட்பதாகப் புகார் கூறியதும், அவன் அம்மா உடனே கிளினிக்குக்கு அழைத்து சென்றார். அங்கு மருத்துவர் முதலில் சாதாரண காது தொற்று என்று நினைத்தார்.
ஆனால் காதுக்குள் ஆழமாக ஒரு உயிருள்ள கரப்பான் பூச்சி ஊர்ந்து கொண்டிருந்ததைப் பார்த்து மருத்துவர் அதிர்ந்து போனார். பூச்சி உயிருடன் அசைந்து கொண்டிருந்ததால், அதை எடுப்பது மிகக் கடினமாக இருந்தது. வீடியோவில் மருத்துவர் சக்ஷன் கருவி உபயோகித்து கவனமாக பூச்சியை ஒரே துண்டாக எடுத்தார்.
சிகிச்சைக்குப் பிறகு, வீட்டில் சுத்தத்தைப் பேணவும், குழந்தையின் காதை அடிக்கடி சரிபார்க்கவும் மருத்துவர் அறிவுறுத்தினார். உயிருள்ள பூச்சி எடுக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பலரும் அதிர்ச்சியும் அருவருப்பும் அடைந்தனர்.
Aadhi Devan
அதிர்ச்சி! திடீரென நீல நிறமாக மாறிய நாய்கள்…. கதிர்வீச்சு தான் காரணமா….? வைரல் வீடியோ….!!
உக்ரைன் நாட்டின் செர்னோபில் அணு உலைப் பகுதியில் உள்ள நாய்களில் சிலவற்றின் ரோமங்கள் பிரகாசமான நீல நிறமாக மாறியுள்ள படங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. இந்தப் படங்களை ‘டாக்ஸ் ஆஃப் செர்னோபில்’ என்ற அமைப்பு பகிர்ந்துள்ளது. இவர்கள் அந்த நாய்களைப் பராமரிக்கும் பொறுப்பாளர்கள்.…
26 வருஷ பழக்கத்தை மறக்க கூண்டுக்குள் தலை…. எப்படியோ நினைச்சது நடந்துருச்சு…. மகிழ்ச்சியுடன் கூறும் தகவல்….!!
இப்ராஹிம் யூசெல் என்ற துருக்கி கிராமவாசி, 26 வருடங்களாக புகைப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்தார். ஒரு நாளைக்கு இரண்டு பாக்கெட் சிகரெட் பிடிப்பார். பிள்ளைகள் பிறந்தநாள், திருமண ஆண்டு விழா போன்ற சிறப்பு நாட்களில் பலமுறை நிறுத்த முயன்றும், சில நாட்களிலேயே மீண்டும்…











