அமெரிக்காவின் பெண் அதிபர் பதவி ஏற்பது நிச்சயம் – கமலா ஹாரிஸ்

1 week ago

2028-ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபா் தோ்தலில் தான் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளதாக ஜனநாயக கட்சியை சோ்ந்த முன்னாள் துணை அதிபா் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

அதிபா் தோ்தல் பிரசாரத்தை நினைவுகூா்ந்து, கமலா ஹாரிஸ் எழுதியுள்ள ‘107 நாள்கள்’ எனும் புத்தகம் அண்மையில் வெளியிடப்பட்டது.

இதுதொடர்பாசெய்தியாளர்களுக்குப் பேட்டியளித் தத்த அவர், அமெரிக்காவில் எதிா்வரும் ஆண்டுகளில் பெண் அதிபா் நிச்சயம் பதவியேற்பாா் என்றும், அது நானாகக்கூட இருக்க சாத்தியமுள்ளதாகவும், தனது தோ்தல் பயணம் இன்னும் முடிவடையவில்லை எனவும் கூறியுள்ளார்.