Atom மின்சார காரை அறிமுகப்படுத்திய ரஷ்யா!

6 days ago

மேற்கத்திய நாடுகளின் தடைகளுக்கு மத்தியில், ரஷ்யா தனது முதல் உள்நாட்டு மின்சார காரான Atom-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆர்க்டிக் குளிரைத் தாங்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் காரில், ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிமீ வரை பயணிக்க முடியும்.

எட்டு நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தக் கார் ஆர்க்டிக் பகுதியில், ஒரு அணுசக்தி பனி உடைக்கும் கப்பலில் வைத்து வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டுள்ளது.