8-வது முறையாக கேமரூனின் அதிபரான பால் பியா!

6 days ago

கேமரூனின் அதிபரான பியா பால் 8-வது முறையாக வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய ஆப்ரிக்க நாடான கேமரூனில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் பால் பியா 53.66 சதவீத ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றதாகவும், இவரை எதிர்த்துப் போட்டியிட்ட இசா டிச்சிரோமா 35.19 சதவீத ஓட்டுகளை பெற்றதாகவும் அந்நாட்டு அரசியலமைப்பு கவுன்சில் தெரிவித்தது.

இதனை இசா டிச்சிரோமா ஏற்காத நிலையில், அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 12ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் பால் பியா வெற்றி பெற்றதாகக் கேமரூன் உச்சநீதிமன்றம் அறிவித்தது.

கடந்த 43 ஆண்டுகளாகப் பியா, கேமரூனை ஆட்சி செய்து வருகிறார். 92 வயதான பால் பியா உலகின் வயதான அதிபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.