இப்ராஹிம் யூசெல் என்ற துருக்கி கிராமவாசி, 26 வருடங்களாக புகைப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்தார். ஒரு நாளைக்கு இரண்டு பாக்கெட் சிகரெட் பிடிப்பார். பிள்ளைகள் பிறந்தநாள், திருமண ஆண்டு விழா போன்ற சிறப்பு நாட்களில் பலமுறை நிறுத்த முயன்றும், சில நாட்களிலேயே மீண்டும் தொடங்கிவிடுவார். இறுதியாக, இந்த பழக்கத்தை என்றும் விட வேண்டும் என்ற உறுதியான முடிவெடுத்தார்.
அதற்காக அவர் ஒரு வித்தியாசமான வழியைக் கையாண்டார். இரும்புக் கம்பிகளால் தலைக்கு ஹெல்மெட் போன்ற கூண்டு செய்து, அதைத் தன் தலையில் பூட்டிக்கொண்டார். அந்தப் பூட்டின் சாவியை மனைவியிடம் கொடுத்தார். பசித்தாலோ, தாகமாக இருந்தாலோ மட்டும் மனைவி பூட்டைத் திறந்து, சாப்பிடவும் குடிக்கவும் வாய்ப்பு கொடுப்பார். சிகரெட் பிடிக்க முடியாமல், அந்த ஆசையே அவரை விட்டு ஓடியது.
இந்த உறுதியான முயற்சியால் இப்ராஹிம் வெற்றிகரமாக புகைப்பழக்கத்தை விட்டார். 11 வருடங்களுக்கு முன்பு நடந்த இந்தச் சம்பவத்தின் புகைப்படங்களும் வீடியோக்களும் இப்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகின்றன. மன உறுதி இருந்தால் எந்தக் கெட்ட பழக்கத்தையும் விட முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
Aadhi Devan
இந்தியாவுக்கு சொந்தமானதா அபகரிக்கிறீங்களா….? வெறும் ‘பரிசு’ இல்ல…. இது யூனுஸின் சதி! சர்ச்சைக்குரிய வரைபடத்தை பரிசளித்த வங்கதேசம்….!!
வங்கதேசத்தின் தற்காலிகத் தலைவர் முகமது யூனுஸ், பாகிஸ்தான் கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் சாகிர் சம்சாத் மிர்சாவுக்கு அளித்த பரிசில் ஒரு சர்ச்சைக்குரிய வரைபடம் இடம்பெற்றிருந்தது. அந்த வரைபடத்தில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் அதனுடன் இணைந்த மற்ற பகுதிகள்…
“உன் நாட்டுக்கு திரும்பிப் போ” முடிவுக்கு வருமா இந்த இனவெறி….? கனடாவில் இந்தியாவுக்கு ஏற்பட்ட அசிங்கம்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!
கனடாவில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் ஒரு இந்திய ஊழியர் மீது இனவெறி தாக்குதல் நடந்தது. ஒரு மனிதர் அந்த ஊழியரை “உன் நாட்டுக்கு திரும்பி போ” என்று மிகவும் இழிவாகவும் ஆபாசமாகவும் பேசினார். இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக…











