வெளிநாடொன்றில் வெடித்த வன்முறை: 700 தொட்டை பலி எண்ணிக்கை

5 days ago

தான்சானியாவில் வன்முறையில் கடந்த மூன்று நாட்களில் 700 பேர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் முடிவை ஏற்க மறுத்து இடம்பெற்ற போராட்டத்தினால் இவ்வாறான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் நேற்று முன்தினம் (29) ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது.

தேர்தலில் மோசடி 

குறித்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி சிசிஎம் கட்சியைச்சேர்ந்த சமியா சுலுஹூ ஹசன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

 700 தொட்டை பலி எண்ணிக்கை | Tanzania Election Violence Kills 700

இருப்பினும், இந்த தேர்தல் முடிவை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி தேர்தலில் மோசடி நடந்ததாக குற்றம்சாட்டிய நிலையில், அங்கு போராட்டம் வெடித்துள்ளது.

இதையடுத்து, அந்நாட்டில் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்பட்டோர் உயிரிழப்பு

அத்தோடு, இணையதள சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் வெளிநாட்டு நிருபர்களுக்கு செய்தி சேகரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 700 தொட்டை பலி எண்ணிக்கை | Tanzania Election Violence Kills 700

இந்தநிலையில், கடந்த சில நாட்களாக அங்கு நடக்கும் மோதலில் 700 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என எதிர்க்கட்சி தலைவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மேலும், தர் எஸ் சலாம் பகுதியில் 350 மற்றும் மவான்சா பகுதியில் 200 இற்கும் மேற்பட்டோரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP  இல் இணைந்து கொள்ளுங்கள்...!