பாதாள உலகக் குழு உறுப்பினர் மிதிகம ருவன் மற்றும் சூட்டி எனப்படுபவரின் நெருங்கிய நண்பர் ஒருவர் மூலம் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவை கொலை செய்வதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, துபாயிலிருந்து வழங்கப்பட்ட குறித்த ஒப்பந்தத்திற்காக கொலையாளிக்கு 15 இலட்சம் ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தப் பணத் தொகையானது கொலையை மேற்கொள்வதற்கு முன்னரே கொலையாளிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிதாரி கைது
நேற்று மாலை (26.10.2025) மஹரகம, நாவின்ன பகுதியில் வைத்து வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த கைதைத் தொடர்ந்து, தொடர்புடைய அனைத்து தகவல்களும் புலனாய்வுக் குழுக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.









