வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியின் அடவெலயாய பகுதியில் நேற்று (26) மாலை நடந்த ஒரு வாகன விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெல்லவாய நோக்கிச் சென்ற இராணுவப் பேருந்து, எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 36 வயதுடைய வெல்லவாயவைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜென்ட் உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.









