வவுனியா ஆயுத விவகாரம்! கைது செய்யப்பட்ட தமிழர்கள் மூவரும் கைக்காட்டிய குற்றவாளி

2 days ago

வவுனியா மற்றும் கிரிபத்கொட உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்களுடன் "பிரவீன்" என்ற பாதாள உலக குற்றவாளிக்கு தொடர்பு இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்டுள்ள மூவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர், சந்தேக நபரான பிரவீன் தற்போது வெளிநாடொன்றில் தலைமறைவாகியுள்ளதாக கூறியுள்ளனர்.


புலிகளின் ஆயுதங்கள் 

சமீபத்தில், இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று தமிழர்கள், கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

வவுனியா ஆயுத விவகாரம்! கைது செய்யப்பட்ட தமிழர்கள் மூவரும் கைக்காட்டிய குற்றவாளி | Praveen Is Linked To The Weapons Found In Vavuniya

அண்மையில் வல்வெட்டித்துறை பகுதியில் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்த மூன்று சந்தேக நபர்களும் தொடர்புடையவர்கள் என கூறப்படுகிறது.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டுகள், விடுதலைப் புலிகள் அமைப்பால் மறைத்து வைக்கப்பட்டவை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

PTA விசாரணை

இதேவேளை, வவுனியா மற்றும் கிரிபத்கொட பகுதிகளில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவங்களிலும் சந்தேக நபர்கள் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வவுனியா ஆயுத விவகாரம்! கைது செய்யப்பட்ட தமிழர்கள் மூவரும் கைக்காட்டிய குற்றவாளி | Praveen Is Linked To The Weapons Found In Vavuniya

அதன்படி, குறித்த மூன்று சந்தேகநபர்களிடமும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) விதிகளின் கீழ் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில், தற்போது பிரவீன் என்ற நபர் தொடர்பான விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!