வடக்கை முடக்கிய மின்வெட்டு ...! துண்டிக்கப்பட்ட தொலைபோசிகள் : அவதியில் மக்கள்

1 week ago

நேற்றைய தினம் வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட மின் தடையால் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மின்தடையால் அலைபேசிகள் உள்ளிட்ட சாதனங்களுக்கு இணையத்திலும் பெரும் கோளாறு ஏற்பட்டிருந்தது.

வர்த்தக நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டதுடன் வர்த்தகர்கள் பெருமளவான இழப்புக்களை சந்தித்துள்ளதாகத் தெரியவருகிறது. 

பாரியளவிலான நட்டம்

குறிப்பாக இலத்திரனியல் தொழிநுட்ப ரீதியிலான வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வர்த்தக நிறுவனங்கள் பாரியளவிலான நட்டங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 அவதியில் மக்கள் | Power Outage Power Cut In Sri Lanka

வடக்கு மாகாணத்தில் மன்னார் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 13 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

வவுனியா, மன்னார் 220 கே.வி.மின் பரிமாற்ற வடத்தை மாற்றிய மைப்பதற்கான வேலைகளுக்காகவே நேற்று காலை 6 மணி முதல் மாலை 6.15 மணி வரை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத் தீவு, வவுனியா ஆகிய 4 மாவட்டங்களில் மின் துண்டிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நேர மின் தடை

மின்சாரம் துண்டிப்பு குறித்து முன்கூட்டியே அறிவிப்பு விடுக்கப் பட்டிருந்ததால் சில வியாபாரிகள் முன்னாயத்த ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 அவதியில் மக்கள் | Power Outage Power Cut In Sri Lanka

எனினும் குளிர்சாதனத்தில் பொருட்களை வைத்திருந்து விற்பனை செய்யப்படும் பொருட்களை விற்கும் வியாபாரிகள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும்பாலானவர்கள் வீட்டில் இருக்கின்றனர்.  நீண்ட நேர மின் தடையால் இன்னல்களுக்கு மத்தியிலேயே அவர்கள் பொழுதைக் கழிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!