லூவர் அருங்காட்சியக கொள்ளை சம்பவம்: இரு சந்தேகநபர்கள் கைது!

1 week ago

பிரான்சில் உள்ள உலகப்புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியகத்தில் கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்று (26.10.2025) பகல் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு சந்தேகநபர்களில் ஒருவர் நேற்று (25.10.2025) மாலை அல்ஜீரியாவுக்கு பயணிக்க முயன்றபோது விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் தற்போது இருவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

முதலாவது நபர் நேற்று (25.10.2025) இரவு பத்து மணியளவில் சார்லஸ்-டி-கோல் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சிறிது நேரத்தில் இரண்டாவது நபர் பரிஸின் சென்ற் டெனிஸ் பகுதியில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டமிட்ட கொள்ளை

குறித்த இருவரும் திட்டமிட்ட கொள்ளை மற்றும் குற்றவியல் சதி ஆகிய குற்றசாட்டுக்களின் கீழ் தற்போது தடுத்துவைக்கப்ட்டுள்ளனர்.

 இரு சந்தேகநபர்கள் கைது! | Louvre Museum Robbery Two Suspects Arrested

பிரான்சின் ஆராய்ச்சி மற்றும் தலையீட்டுப் படையணி (BRI) மற்றும் கொள்ளை அடக்குமுறைப் படையணி (BRB) ஆகியன ஒருங்கிணைந்து இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிகிறது.

கடந்த ஞாயிறன்று இடம்பெற்ற இந்த கொள்ளையில் 88 மில்லியன் யூரோ மதிப்புள்ள எட்டு புராதன நகைகள் கொண்டுசெல்லப்பட்டதையடுத்து 100க்கும் மேற்பட்ட புலனாய்வாளர்கள் இந்த நகைகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்தபட்டிருந்தனர்.

சந்தேகநபர்கள் காவலில் வைக்கபட்டாலும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வரை கொள்ளைபோன நகைகளில் எவையும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனத் தெரிகிறது. 

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025