லாஃப்ஸ் எரிவாயு விலை குறித்து வெளியான தகவல்

4 days ago

மாதாந்த விலை திருத்தத்திற்கு அமைய நவம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி நிரோஷன் ஜே. பீரிஸ் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இதன்படி, லாஃப்ஸ் எரிவாயுவின் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை நவம்பர் மாதம் முழுவதும் தற்போதைய விலையிலேயே நீடிக்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.   

பழைய விலையில் விற்பனை செய்யப்படும்

அதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயுவின் விலை 4,100 ரூபாயாக விற்பனை செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

லாஃப்ஸ் எரிவாயு விலை குறித்து வெளியான தகவல் | No Laugfs Gas Price Revision In November

அத்துடன் 5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயுவின் விலை 1,645 ரூபாயாக விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயுவின் விலை 658 ரூபாயாக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!