ரஷ்யாவின் (Russia) அணு ஆயுத சோதனைக்கு அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா சமீபத்தில் அணுசக்தி மூலம் இயங்கும் புரெவெஸ்ட்னிக் (Burvestnik) என்ற கப்பல் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் மூத்த இராணுவ தளபதிக்கு இடையிலான உயர்மட்ட சந்திப்புக்கு பிறகு இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆயுத சோதனை
இந்தநிலையில் குறித்த புதிய அணு ஆயுத சோதனைக்கு டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இது ஏவுகணை சோதனைக்கான பொருத்தமற்ற காலம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போர் நடவடிக்கை
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், புதிய ஏவுகணைகளை சோதனை செய்வதை விட்டு விட்டு, உக்ரைனுடனான போர் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கையில் கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒரு வாரத்தில் முடிய வேண்டிய போர் தற்போது விரைவில் நான்காவது ஆண்டை அடைய இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.










