இலங்கை தமிழரசுக் கட்சியின் அழைப்பின் பேரில் வருகைதந்த தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள் இன்றையதினம் (02.11.2025) யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தை பார்வையிட்டனர்.
14 அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 24 பேர் கொண்ட இளம் அரசியல் தலைவர்கள் குழு இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.
கள விஜயம்
வடக்கு மாகண மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கள விஜயங்கள் மேற்கொள்ளும் நோக்கத்துடன் குறித்த குழுவினர் வருகைதந்திருந்தனர்.

மேலும், நேற்றையதினம் (01.11.2025) யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை வரை தெடருந்தில் பயணித்து காங்கேசன்துறை துறைமுகம், மயிலிட்டி கடற்றொழில் துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலையம் ஆகியவற்றுக்குச் சென்று அங்குள்ள அபிவிருத்தி நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.












