யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக மேல்கூரையில் மறைத்து வைக்கப்பட நிலையில் இரண்டு மகசின்களும் அதற்குரிய 59 ரவைகளும் 5 அடி நீளமான வயர்களும் நேற்றுமாலை அடையாளம் காணப்பட்டிருந்தன.
இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு நேற்று இரவு முதல் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று காலை அங்கு சென்ற கோப்பாய் பொலிசாரும் விசேட அதிரடிப்படையினரும் குறித்த பொருட்களை மீட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.










