யாழ் கடற்பரப்பில் கைதான இந்திய கடற்றொழிலாளர்கள்

2 days ago

எல்லை தாண்டி வந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் யாழ் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். காரைநகர் கடற்பரப்பில் வைத்து இன்றையதினம் (03) கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று படகுகளில் வந்த 31 இந்திய கடற்றொழிலாளர்கள் இவ்வாறு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தவேளை கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் 

கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் அனைவரையும் யாழ்ப்பாணம் மாவட்ட நீரியல்வள திணைக்களத்தினர், கடற்படையினரிடமிருந்து பொறுப்பேற்று, அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

யாழ் கடற்பரப்பில் கைதான இந்திய கடற்றொழிலாளர்கள் | Indian Fishermen Arrested For Illegal Fishing

இதேவேளை வட பகுதி கடலில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை இந்திய கடற்றொழிலாளர்கள், சட்டவிரோத மீன்பிடி மற்றும் சட்டவிரோத பயணம் என்பன தொடர்பாக 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!