Jaffna Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dilakshan Oct 26, 2025 03:16 PM GMT
![]()
யாழ்ப்பாணம் - தட்டாதெரு பகுதியில் இன்றையதினம்(26.10) இடம்பெற்ற விபத்து ஒன்றில் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு மோட்டார் சைக்கிளில் இருவர் இடது பக்கத்தால் சென்றவேளை எதிர் திசையில் இருந்து வந்த ஹையேஸ் ரக வாகனமானது தனது பக்கத்தை விட்டு விலகி வலது பக்கமாக சென்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விசாரணை
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்ததுடன் விபத்தினை ஏற்படுத்திய ஹையேஸ் ரக வாகனமும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

விபத்து சம்பவம் குறித்தான விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025









