யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இருவர்

2 days ago

 யாழ்ப்பாண நகரில் இளைஞர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்த இருவர் இன்று கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 3200 போதை மாத்திரைகள் காவல்துறையினரால் மீட்கப்பட்டது.

 கிடைத்த இரகசிய தகவல்

யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கஸ்துரியார் வீதியில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்தவர்களை சோதனையிட்டபோதே குறித்த நபர்கள் போதை மாத்திரைகள் வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இருவர் | Two Arrested In Jaffna City

 ஐந்து சந்தி பகுதி அருகில் வசிக்கும் 21 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

பத்து போதை மாத்திரைகள் அடங்கிய அட்டை 3000 ரூபா

போதைப்பொருள் தொடர்பாக காவல்துறையினரின் கைது நடவடிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில் அதற்கான தட்டுப்பாடு காரணமாக சந்தேக நபர்கள் பத்து போதை மாத்திரைகள் அடங்கிய அட்டையை 3000 ரூபா வரை விற்பனை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இருவர் | Two Arrested In Jaffna City

மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!