யானை தாக்குதலில் இருந்து தப்பிய லசந்த கொலையாளிகள்! காட்டில் கிடந்த மோட்டார் சைக்கிள்

4 days ago

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவை கொலை செய்வதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் புத்தல-கதிர்காமம் வீதியில் உள்ள காட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை சேர்ந்த அதிகாரிகள் குழு நேற்று (31) பிற்பகல் வீதியில் 16வது தூணுக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் குறித்த மோட்டார் சைக்கிளைக் கண்டுபிடித்தது.


காட்டு யானை தாக்குதல்

கொலையைச் செய்த பின்னர் குறித்த மோட்டார் சைக்கிளில் அவர்கள் தப்பிச் சென்றதாகவும், சந்தேக நபர்கள் கெக்கிராவ நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதனை அங்கேயே விட்டுச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானை தாக்குதலில் இருந்து தப்பிய லசந்த கொலையாளிகள்! காட்டில் கிடந்த மோட்டார் சைக்கிள் | Motorcycle Used In Lasa Murder Found In Jungle

குறித்த காட்டுப் பகுதியில் மோட்டார் சைக்கிளை கைவிட்டு செல்ல முயன்ற போது, சந்தேகநபர்கள் மீத காட்டு யானை தாக்குதல் நடத்தியதாகவும் எனினும், அதிலிருந்து அவர்கள் தப்பியதாகவும் கூறியுள்ளனர்.

மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கதிர்காமம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!