Fishing Sri Lanka Sri Lanka Navy
By Sathangani Nov 01, 2025 06:52 AM GMT
![]()
மேற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நெடுநாள் மீன்பிடி படகு ஒன்று இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவைளப்பு நடவடிக்கையின் போதே குறித்த மீன்பிடி படகு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது குறித்த மீன்பிடி படகில் இருந்த 6 சந்தேக நபர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்ய்பட்டுள்ளனர்.
கடற்படை தெரிவிப்பு
அத்துடன் சந்தேகத்திற்குரிய குறித்த மீன்பிடிப் படகு தற்போது கரைக்கு கொண்டு வரப்படுவதாகவும் கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அண்மையில் தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பொதிகளில் மொத்தம் 839 கிலோகிராம் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!










