மூன்று வயது மகனை கொன்றுவிட்டு உயிர் மாய்த்துள்ள தாய்! தென்னிலங்கையில் கொடூரம்

1 week ago

காலி - படபொல, கஹட்டபிட்டிய, பொல்லுன்னாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இறந்து கிடந்த மூன்று வயது சிறுவனின் சடலமும், கயிற்றில் தொங்கிய நிலையில் ஒரு பெண்ணின் சடலமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலங்கள் இன்று (27) பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக படபொல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


மகனின் கொலை 

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள், சம்பந்தப்பட்ட வீட்டில் வசிக்கும் லகிது சம்பத் என்ற மூன்று வயது மற்றும் ஆறு மாத சிறுவன் மற்றும் சிறுவனின் தாயான இருணி நெத்யா தில்ருக்ஷி ஆகியோரே என தெரிவிக்கப்படுகிறது.

மூன்று வயது மகனை கொன்றுவிட்டு உயிர் மாய்த்துள்ள தாய்! தென்னிலங்கையில் கொடூரம் | Mother Kills Son And Takes Her Own Life

வீட்டில் கயிற்றில் தொங்கிய நிலையில் காணப்பட்ட பெண், தனது மகனை கொன்றுவிட்டு, பின்னர் தானும் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை

உயிரிழந்த பெண் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு வெளிநாட்டிலிருந்து இலங்கைக்குத் திரும்பியதாகவும், அவர் திருமணமானவராக இருந்தபோதிலும், தனது கணவரிடமிருந்து சட்டவிரோதமான முறையில் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மூன்று வயது மகனை கொன்றுவிட்டு உயிர் மாய்த்துள்ள தாய்! தென்னிலங்கையில் கொடூரம் | Mother Kills Son And Takes Her Own Life

இந்த நிலையில், குடும்ப தகராறு காரணமாக இந்தக் கொலை மற்றும் தற்கொலை நடந்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர்.

சம்பவம் குறித்து படபொல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!