மூட்டை முடிச்சுக்களை கட்டி வெளியேற தயாரான சந்திரிகா!

4 days ago

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கொழும்பில் உள்ள நிதாஹஸ் மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதற்காக தனது உடைமைகளை மூட்டை கட்டிக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமை நீக்கச் சட்டம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதிகள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ குடியிருப்புகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கால அவகாசம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, உடல்நலக்குறைவு காரணமாக தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற நவம்பர் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் கோரியிருந்தார்.

மூட்டை முடிச்சுக்களை கட்டி வெளியேற தயாரான சந்திரிகா! | Chandrika Leaving Her Official Residence

இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி தற்போது வீட்டை விட்டு வெளியேறுவதற்காக தனது உடைமைகளை பிரித்து வருகிறார், மேலும் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் அவர் உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவார் என்று அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, கொழும்பு விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் வெளியேறி தங்காலைக்கு சென்றமை குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!       

GalleryGallery