முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கேப்பாப்புலவுக் குடியிருப்பு பகுதியில் மக்களின் போக்குவரத்துக்கு பாரிய இடையூறாக காணப்பட்ட இலங்கை விமான படையினரால் அமைக்கப்பட்டிருந்த பாரிய தூண்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளன.
அதன்படி, கரைதுறைப்பற்று பிரதேச சபை கனரக வாகனங்களைக் கொண்டு இடையூறாக இருந்த இரண்டு தூண்களையும் அகற்றியுள்ளன.
பாரிய தூண்கள்
இலங்கை விமானப்படையினரின் பாவனையில் இருந்தபோது இந்த கிராமத்திற்கு செல்லும் பிரதான நுழைவாயிலில் அமைக்கப்பட்ட இரண்டு பாரிய தூண்கள் மக்களது போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படுவதாக கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து அவை இவ்வாறு அகற்றப்பட்டுள்ளன.

கேப்பாப்புலவு கிராம அலுவலர் பிரிவின் பிலவுக்குடியிருப்பு கிராமமானது இலங்கை விமான படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு சுமார் ஒரு மாதமாக மக்கள் வீதியில் இறங்கி போராடியதன் பின்னர் மீட்கப்பட்டிருந்தது.
















